பிரதமர் மோடி, வங்கதேசப் பிரதமர் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டியைப் பார்க்க அழைப்பு

0 290

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பார்க்க வருமாறு இருநாட்டுப் பிரதமர்களுக்கும்,
பெங்கால் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 3 டி20 மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தப் போட்டியைக் காண வருமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும், பெங்கால் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அழைப்பை ஏற்பது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடமும் இருந்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

2011 உலகக்கோப்பை அரை இறுதியை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பிரதமர்கள் நேரில் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments