துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்த வடமாநில கும்பல் கைது

0 383

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி வழிப்பறி செய்து வந்த வடமாநில கும்பலை போலீசார் கைது செய்தனர்.

வாகன தணிக்கையின் போது மூன்று வடமாநிலத்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது, அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த வழிப்பறி கும்பல் என்பதும், அவிநாசியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து கொண்டே பல இடங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.

இதனால் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தபா அன்சாரி, சந்தன்குமார் உட்பட மூவரும் முதலில் கைது செய்யப்பட்டனர். பின்னர் கூட்டாளிகளான பீகாரை சேர்ந்த மற்றொரு சந்தன்குமார், ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீபிரதாப் சுனில், நீலகிரியை சேர்ந்த பிரதீப்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments