நோயாளிகளை அழைத்து வர பேரம் - குளோபல் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

0 100

நோயாளிகளை அழைத்து வருவதற்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களிடம் பேரம் பேசியதாக ஆடியோ வெளியானதை அடுத்து, குளோபல் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சுகாதார திட்ட இயக்குனரகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வரும் குளோபல் மருத்துவமனையை சேர்ந்த நிர்வாகி, நோயாளிகளை அழைத்து வந்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களிடம் பேசுவது போன்ற ஆடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து குளோபல் மருத்துவமனை நேற்று நீக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குழு அமைத்து விசாரித்து, குளோபல் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொது சுகாதார திட்ட இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. இதற்காக அமைக்கப்படும் குழுவினர் அந்த மருத்துவமனைக்கு சென்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments