தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ்..!

0 1086

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 8400 ரூபாயும், அதிகபட்சம் 16 ஆயிரத்து 800 ரூபாய் பெறுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தத்தில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 தொழிலாளர்களுக்கு 472 கோடியே 65 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments