பாசனத்துக்காக சோத்துப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு

0 280

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து முதல்போக சாகுபடி பாசனத்துக்காக வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பெரியகுளம், மேல்மங்கலம், லெட்சுமிபுரம், தாமரைக்குளம்,  பகுதியில் மொத்தம் 2 ஆயிரத்து 865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மொத்தம் 126 புள்ளி 28 அடி உயரம் கொண்ட அணை முழு கொள்ளளவை எட்டி தற்போது நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாக உள்ளது.

இந்நிலையில் முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர்  பல்லவி பல்தேவ்,  மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். 

இன்று முதல் 62 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடியும், அடுத்த 31 நாட்களுக்கு 27 கன அடி நீரும், கடைசி 59 நாட்களுக்கு 25 கன அடி நீர் வீதம் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments