சேலம் - கரூர் பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்

0 476

சேலத்தில் இருந்து கரூருக்கு பாசஞ்சர் ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.

சேலத்தில் இருந்து கரூருக்கு சிறப்பு ரயில் கடந்த 6 மாதங்களாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், சேலம் - கரூர் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக மாற்ற தெற்கு ரயில்வே துறை முடிவு எடுத்து, அதன்படி இன்று முதல் ரயில் சேவை தொடங்குகிறது. ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

கரூரிலிருந்து பகல் 11.40க்கு புறப்படும் ரயில், வாங்கல், மோகனூர், நாமக்கல், கலங்காணி, ராசிபுரம், மல்லூர் வழியாக சென்று சேலத்திற்கு பகல் 1.25 மணியளவில் வந்து சேர்கிறது. பின்பு சேலத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணியளவில் புறப்படும் இந்த ரயில் கரூருக்கு மதியம் 3.25 மணிக்கும் சென்றடைகிறது.

இதன் பிறகு இந்த ரயில் கரூரில் இருந்து திருச்சிக்கு செல்கிறது. சேலத்தில் இருந்து கரூர் செல்வதற்கு 25 ரூபாய் பயணக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து வாரத்தில் அனைத்து நாடகளும் இந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments