டிராக்டரை பந்தாடிய யானை..!!

0 340

பீகாரில் சாலையில் சென்று கொண்டிருந்த யானை திடீரென கோபமுற்று டிராக்டரை பந்தாடிய வீடியோ வெளியாகி உள்ளது.

கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள மோத்திஹரி என்ற இடத்தில் யானை ஒன்றை அதன் பாகனும், உதவியாளரும் அழைத்து வந்தனர். அந்த யானைக்குத் தேவையான தீவனத்தழைகளையும் அதன் மேல் ஏற்றி துணைப்பாகன் மேலே அமர்ந்திருக்க, சாதுவாக வந்து கொண்டிருந்த யானை திடீரென சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரைக் கண்டதும் கோபமடைந்தது.

டிராக்டருடன் இணைக்கப்பட்டிருந்த டிரைய்லரை பக்கவாட்டில் சாய்த்த அந்த யானை அப்போதும் கோபம் தணியாமல் அதன் மீது தலையால் மோதி மேலும் கீழே தள்ளியது.

யானையின் ஆக்ரோஷத்திற்கு ஈடுகொடுக்க முடியாத அந்த டிராக்டர் அருகில் இருந்த வீட்டின் மீது சரிய, இறுதியில் வீட்டின் மேற்கூரையும் உடைந்து நொறுங்கியது. இறுதியில் தானாகவே சாந்தமடைந்த யானை மீண்டும் ஆடி அசைந்து தனது பயணத்தைத் தொடங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments