கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் பின்லாந்து வீரர் வால்ட்டரி போட்டஸ் வெற்றி

0 190

ஜப்பான் கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் பின்லாந்து வீரர் வால்டரி போட்டஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 21 சுற்றுகள் கொண்ட நடப்பு சீசனில் 17வது போட்டியாக ஜப்பான் கிராண்ட்பிரி கார்பந்தயம் சுசுகாவில் நேற்று நடைபெற்றது.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியனான ஹாமில்டன் நான்காவது இடத்திலேயே வந்த நிலையில் மற்ற வீரர்களை முந்திச் செல்ல கடுமையாகப் போராடினார்.

302 கிலோமீட்டர் தூரம் கொண்ட இலக்கை ஒரு மணி 21 நிமிடம் 46 வினாடிகளில் கடந்து மெர்சிடஸ் அணியின் போட்டஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

நடப்பு சீசனில் இதுவரை 612 புள்ளிகளைப் பெற்றுள்ள மெர்சிடஸ் அணிக்கு பார்முலா ஒன் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. ஃபெராரி, ரெட்புல் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 6வது முறை மெர்சிடஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments