இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

0 535

ண்டவியல் ஆராய்ச்சி மற்றும் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் முதல் கோளை கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மனித குலத்திற்கு அசாதாரண பங்களிப்பை வழங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஸ் அறிவியல் கழகம் மூலம் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

உடல் செல்கள் ஆக்சிஜன் அளவுக்கு ஏற்ப எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக 3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பீபிள்ஸ், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டிடியர் குவலாஸ், மற்றும் மைக்கேல் மேயர் ஆகிய மூவருக்கு, இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், ஜேம்ஸ் பீபிள்ஸ் என்ற ஆராய்ச்சியாளர், அண்டவியல் தொடர்பாக 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

பிரபஞ்சம் தொடர்பான கோட்பாடு குறித்து 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் ஆராய்ச்சி செய்ததாகவும், அது தான், பெருவெடிப்பு முதல், தற்காலம் வரையிலான பிரபஞ்ச வரலாற்றின் நவீன புரிதலின் அடித்தளமாக உள்ளதாகவும் போற்றப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. டிடியர் குவலாஸ், மற்றும் மைக்கேல் மேயர் ஆகியோர், 1995ஆம் ஆண்டில் சூரியக் குடும்பத்திற்கு வெளியே 51 பெகசி (51 pegasi) என்ற கோளைக் கண்டுபிடித்தனர். சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை அது சுற்றி வருவதையும் அவர்கள் கண்டறிந்தனர். இதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments