பிரான்ஸில் சாஸ்திரா பூஜை நடத்த இருக்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 214

பிரான்ஸ் செல்லும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தசராவை முன்னிட்டு அங்கு சாஸ்திரா பூஜை நடத்த உள்ளார்.

முதல் ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக் கொள்வதற்காக பாரிஸ் செல்லும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு உள்ள விமானப்படை தளத்தில் தசரா தினத்தன்று ரபேல் போர் விமானத்தை பெற இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள், ரபேல் விமானம் தயாரித்த டசால்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தசராவை முன்னிட்டு சாஸ்திரா பூஜை நடத்த உள்ளார். தசரா தினத்தன்று நடத்தப்படும் சாஸ்திரா பூஜையானது, ஆயுதங்களை முன்னிறுத்தி செய்யப்படும் வழிபாடாகும். இந்த பூஜையை ராஜ்நாத் சிங், கடந்தமுறை உள்துறை அமைச்சராக இருந்த போதும் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments