3 பெண் குழந்தைகளுடன் விஷம் அருந்திய தாய்

0 281

தேனி மாவட்டம் போடியில் தனது 3 மகள்களுடன் பெண் ஒருவர் விஷம் அருந்தியுள்ளார். இதில் இரண்டு மகள்கள் உயிரிழந்த நிலையில் தாய் மற்றும் இளைய மகள் உயிருக்கு போராடி வருகின்றனர். வறுமை காரணமாக குடும்பபெண் ஒருவர் எடுத்த விபரீத முயற்சி குறித்து விளக்குகிறுது இந்த செய்தி தொகுப்பு.

கீரைக்கடை வெள்ளையாண்டி தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி - லட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு அனுசியா, ஐஸ்வர்யா மற்றும் அக்ஷ்யா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் அருகே உள்ள அரசு பள்ளியில் 11, 9 மற்றும் 5ம் வகுப்பு படித்து வந்தனர்.

பால்பாண்டி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தையல் வேலை செய்து தனது 3 மகள்களை வளர்த்து வந்துள்ளார் லட்சுமி. இந்த நிலையில் காலையில் வெகு நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படாத நிலையில், அக்கம் பக்கம் வீட்டார்கள் லட்சுமி வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.

ஆனால் கதவு வெகு நேரமாகியும் திறக்கப்படாததால், சந்தேகமடைந்தவர்கள் போலீசாருக்கு உடனடியாக இது குறித்து தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த வந்த போடி நகர போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது வாயில் நுரை தள்ளியவாறு ஆபத்தான நிலையில் லட்சுமி உள்ளிட்ட 3 குழந்தைகளும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

உடனடியாக அவர்களை நால்வரையும் மீட்ட போலீசார் போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் எவ்வித பலனின்றி அனுசியா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

தாய் லட்சுமி மற்றும் இளைய மகள் அக்ஷ்யா ஆகிய இருவரும் மேல் சிகிச்சைகாக தேனி அரசு மருத்துவக் கல்லுரிக்கு போடி அரசு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

கணவர் துணை இல்லாததும், மூன்று பெண்குழந்தைகளை எவ்வாறு கரைசேர்ப்பது என தெரியாமல் மனமுடைந்து வாழ்ந்த வந்த லட்சுமி, தனது குழந்தைகளுடன் இந்த விபரீத முயற்சியில் ஈடுபட்டதாக காவல் துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் உள்ளது. சம்பவம் தொடர்பாக போடி நகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்துடன் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments