சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

0 256

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. வெளியூரில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதேபோல், ஆண்டிபட்டி அருகே உள்ள மூல வைகை ஆறு மற்றும் சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால் வறண்டு கிடந்த மூல வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மேகமலையில் அமைந்திருக்கும் சின்ன சுருளி அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments