கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்க 7ஆவது நாளாக தடை

0 182

தேனி மாவட்டம் பெரியக்குளம் அருகே கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 7ஆவது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மலையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.


இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவிக்கு செல்லவும், குளிக்கவும் 7ஆவது நாளாக தடை விதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதே போல் தொடர் மழையால் தேனி மாவட்டம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பெரியகுளம் அருகே உள்ள சோத்துபாறை அணை நீர் பிடிப்பு பகுதி, மேற்கு தொடர்ச்சி மழை உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர்மழையால் கல்லாறு, செலும்பு உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆறுகள் சென்று சேரும் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என்று வடுகபட்டி, ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட கரையோர மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments