தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு பாராட்டு விழா

0 266

தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுள்ள, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தர ராஜனுக்கு சென்னையில் பாராட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் த மா.க மூத்த தலைவர் ஞானதேசிகன், பாமக தலைவர் ஜி.கே.மணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

இதைத் தொடர்ந்து பேசிய தமிழிசை, மறைந்த தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனாரை பார்த்து வளர்ந்ததாகவும், அதேநேரத்தில் துணிச்சலில் ஜெயலலிதா, தமிழ் புலமையில் கருணாநிதி, எளிமையாக பழகுவதில் விஜயகாந்த், சமூக அக்கறையில் இராமதாஸ், பேச்சாற்றலில் வைகோ ஆகியோரின் நல்ல கலவையாக இருக்க வேண்டுமென நினைப்பதாக கூறினார். தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்ற போவதாகவும் அவர் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments