பாங்காக் ஷாப்பிங் மாலின் மேற்கூரையின் ஒரு பாகம் விழுந்த விபத்தில் வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடிக்கும் காட்சி

0 148

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஷாப்பிங் மாலின் மேற்கூரையின் ஒரு பாகம் விழுந்த விபத்தில் வாடிக்கையாளர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்திலேயே மிகப்பெரிய ஷாப்பிங் மாலாகக் கருதப்படும் சென்ட்ரல் பிளாஸா வெஸ்ட்கேட் பகுதியில் பெய்த கனமழை, இடி, மின்னலை அடுத்து ஷாப்பிங் மாலின் மேற்கூரையின் ஒரு பாகம் பெயர்ந்தது.

அதன் கீழ் நின்றவர்கள் தண்ணீர் சொட்டியதை உணர்ந்து சுதாரித்து மேலே பார்த்தபோது, மேற்கூரையின் ஒரு பாகம் தங்களை நோக்கி வருவதைக் கண்டு அச்சத்தில் பதறியடித்து ஓடினர்.

அந்த பயங்கர தருணத்தில் அவர்கள் பீதியுடன் ஓடியது பதறவைப்பதாக இருந்தது.

அனைவரும் முன்னெச்சரிக்கையாக விலகிவிட்டதால், உயிர்சேதம் ஏற்படவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இரவோடு இரவாக மேற்கூரை சரிசெய்யப்பட்டு மறு நாள் காலை வழக்கம் போல் ஷாப்பிங் மால் திறக்கப்பட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் கூரை பெயர்ந்தது எப்படி என அறிய பொறியாளர் குழு ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments