30ந் தேதிக்குள் அனைத்து நீர்நிலைகள் தூர்வாரும் பணி நிறைவு பெறும் - சந்தீப் நந்தூரி

0 217

முதல்வர் பழனிசாமியின் உத்தரவின் படி வரும் 30ந் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணிகள் நிறைவுபெறும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருவரங்கப்பட்டியில் உள்ள குளத்தில் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் குடிமராமத்து பணியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நிகழ்வுக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 37 குளங்களும், ஊரக பகுதிகளில் 87 நீர்பாசன குளங்களும், 472 ஊரணிகள் மற்றும் குட்டைகள் உள்ளதாகவும் இவற்றில் முதலமைச்சரின் குடிமரமாத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

70 சதவீதம் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், வருகின்ற அக்டோபர் மாதம் பெய்யும் பருவமழை நீரினை சேமிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments