இளம்பெண்ணுடன் தகாத உறவு - அடித்து உதைத்த மக்கள்
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி, நபர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்வாடி எல்.என்.எஸ் புரத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் அதே ஊரைச்சேர்ந்த ரோஷன் பானுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பிடித்து ரோஷன் பானுவுடன் தகாத உறவு வைத்திருப்பதாக கூறி அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் தாக்கப்பட்ட நபர் தனது கணவர் என்றும், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ரோஷன் பானு ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் 11 பேர் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதற்கிடையே ரோஷன் பானுவின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், தாக்கப்பட்ட மணி கணவர் அல்ல என்றும் கூறப்படுவது பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Comments