இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவு

0 356

ந்தியப் பங்குச்சந்தைகள் காலை முதலே சரிவுடன் வர்த்தகமான நிலையில், ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத் தொடக்கம் முதலே இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தமாகி வந்தன. ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகமானது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 180 புள்ளிகள் வரை சரிந்து 10 ஆயிரத்து 800 புள்ளிகளாக வர்த்தகமானது. 

ஆட்டோ மொபைல் துறைக்கான குறியீடு 1.75 சதவீதம் சரிந்த நிலையில், நிஃப்டியின் துறை சார்ந்த அனைத்து குறியீட்டு எண்களுமே சரிவுடனயே வர்த்தகமாகின. இதில் ஆக்சிஸ் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்.சி.எல் டெக், ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.

சவுதி அரேபியாவில் எண்ணெய்க் கிணறுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியால், கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் சந்தை உணர்வுகள் பாதிக்கப்பட்டு, பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 481 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 185 புள்ளிகள் வரை குறைந்து, 10 ஆயிரத்து 817 புள்ளிகளாக முடிவடைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments