அலிகான்டே மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மக்கள் சிக்கித் தவிப்பு

0 203

ஸ்பெயின் நாட்டின் அலிகான்டே மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கியிருந்த மக்கள், ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தென்கிழக்குப் பகுதியான அலிகான்டே மாகாணத்தில் அண்மையில் தொடர்ச்சியாக 2 நாள்கள் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த மாகாணத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகள், பிரமாண்ட கட்டடங்கள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில், அல்மோராடி, கலோசா டி செகுரா ஆகிய இடங்களில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் ஸ்பெயின் ராணுவத்திலுள்ள அவசர கால படைப்பிரிவினர் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரில் சென்ற அவர்கள், வீடு ஒன்றில் சிக்கி வெளியேற முடியாமல் சிலர் தவித்து வருவதை கண்டனர்.

பின்னர் அவர்களை ஒவ்வொருவராக ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். மழைக்கு ஸ்பெயினில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக, காஸ்டிலா லா மான்ஸாவில் 2 குழந்தைகள், வெள்ளம் காரை அடித்துச் சென்றபோது காருடன் இழுத்துச் செல்லப்பட்டு பலியாகினர். மழை மற்றும் வெள்ளம் காரணமாக, அப்பகுதியில் உள்ள 2 விமான நிலையங்கள், ஏராளமான ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தட்பவெப்ப நிலை தற்போது சீரடையத் தொடங்கிய போதிலும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமென்றும், கார்களை பயன்படுத்துவதை தவிர்க்கும்படியும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments