தங்கத்தின் விலை குறைந்தது

0 1034

30 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையான ஒருசவரன் ஆபரணத்தங்கம், மீண்டும் 29 ஆயிரம் ரூபாயை விட குறைந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை திடீரென அதிகரித்து பல்வேறு புதிய உச்சங்களையும் எட்டியது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 30 ஆயிரம் ரூபாயையும் கடந்து விற்பனையானது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

அந்த வகையில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து, 28 ஆயிரத்து 912 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 20 ரூபாய் குறைந்து, மூவாயிரத்து 614 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம் வெள்ளி விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 51 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ விலையில் மாற்றமின்றி 51 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments