நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவது ஒன்றுதான் தீர்வைத் தரும்

0 219

பிரெக்ஸிட் விவகாரத்தில் நிலவும் முட்டுக்கட்டைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவது ஒன்றுதான் தீர்வைத் தரும் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதா?வேண்டாமா ? என்பது குறித்து அந்நாடாளுமன்றத்தில் விரைவில் வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் போரிஸ் ஜான்சன் பேசியபோது, நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவது ஒன்றுதான், பிரெக்ஸிட் முட்டுக்கட்டைக்கு தீர்வைத் தரும் என்றார்.

தேர்தல் நடத்துவதற்கு நாடாளுமன்றம் தனது ஒப்புதலை தராதபட்சத்தில், ஒப்பந்தத்தை ஏற்கும்படி வலியுறுத்துவதற்கு ஐரோப்பிய யூனியன் மாநாட்டுக்கு அடுத்த மாதம் செல்ல போவதாகவும் ஜான்சன் தெரிவித்தார். ஆனால், அப்போது மேலும் காலதாமதம் செய்யும்படி கோரிக்கை விடுக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கை பிரெக்ஸிட் எனப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரிட்டன் அரசு மேற்கொள்ளும் முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக முட்டுக்கட்டை நிலவுகிறது. இந்தப் பிரச்னையின் காரணமாக, பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments