காவல் வாகனம் மோதி 55 வயது பெண் பலி

0 431

கோவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு வந்த காவல் வாகனம் மோதி 55 வயதுப் பெண் பலியான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் 5-வது நாளாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டு வருகின்றன. அதனை முன்னிட்டு ராஜவீதி தேர்நிலைத் திடல் அருகே போலீஸார் குவிக்கப்பட்டனர்.

போலீசாரை இறக்கிவிட்ட பின் காவல் வாகனம் புறப்பட்டது. அப்போது காவல் வாகனத்தைக் கடந்து சென்ற பெண்ணை கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை இயக்கினார்.

சிறிதுதூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண் மீது காவல் வாகனம் ஏறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் உயிரிழந்த பெண் பேரூரைச் சேர்ந்த கலா என்பதும் பொறிக்கடை ஒன்றில் வேலை செய்த அவர், வேலைக்கு செல்ல பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற போது விபத்து நேரிட்டதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments