விமான நிலையத்தில் பை திருடு போனதற்கு அதிகாரிகள், விமான நிறுவனமே பொறுப்பு- சவுந்தர்யா ரஜினிகாந்த்

0 984

லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தில் பாஸ்போர்ட் உள்ளிட்டவை வைத்திருந்த பை திருடு போனதற்கு விமான நிறுவனமும் அதிகாரிகளுமே பொறுப்பு என சவுந்தர்யா ரஜினிகாந்த் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சவுந்தர்யா, தனது கணவர் விசாகனுடன் கடந்த 1-ம் தேதி லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் எமிரேட்ஸ் சவுஃபியுர் லாஞ்சில் ( Emirates chauffeur lounge) தங்களது காருக்காக காத்திருந்ததாகவும், அப்போது, கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் வைத்திருந்த பை திருடுபோனதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹீத்ரூ போலீசாரிடம் தகவல் அளித்த நிலையில் மறுநாள் காவல்துறை தங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் திருட்டு நடந்த இடத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என பதிலளித்ததாகக் கூறியுள்ளார்.

அதிகாரிகளின் பொறுப்பற்ற பதில் அதிர்ச்சியளிப்பதாகவும், இதற்கு அதிகாரிகளும், விமான நிறுவனமுமே பொறுப்பு என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இது தங்களுக்கு மட்டுமின்றி யாருக்குமே நடக்கக் கூடாத மோசமான அனுபவம் எனவும் சவுந்தர்யா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments