கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு ராகுல் காந்தி கடிதம்

0 208

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமது வயநாடு மக்களவைத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

வெள்ளத்தால் சேதம் அடைந்த அல்லது தொலைந்து போன முக்கிய ஆவணங்களை மறுபடியும் வழங்குவதற்காக ஒற்றைச் சாளர முறையை ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டைகள், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள்,நிலப்பத்திரங்கள், பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், திருமண சான்றிதழ்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், வரி ரசீதுகள், பான் அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை வெள்ளத்தில் பறிகொடுத்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உரிமைகளையும் சலுகைகளையும் பெற முடியாமல் பரிதவிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள் அரசு அலுவலகங்களை நாடி அலைய வேண்டிய நிலையைத் தவிர்க்க அனைத்துக்கும் ஒற்றைச் சாளர முறையில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ராகுல்காந்தி கேரள அரசை கேட்டுக் கொண்டுள்ளார். முக்கிய ஆவணங்களின் நகல்களை மக்களின் வீடு தேடி கொண்டு போய் சேர்க்குமாறும் ராகுல்காந்தி கோரியுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments