இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்

0 356

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அமைச்சர் விஜயபாஸ்கர் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசின் இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை போன்றவை தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும் என்றும் மனுக்கள் முதலமைச்சரின் நேரடி பார்வைக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments