ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு

0 1715

கடந்த 24 மணி நேரமாக ப.சிதம்பரம் எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், அவர், இரவு 8.15 மணி அளவில்  டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைமறைவாக எங்கும் செல்லவில்லை என்றும், வழக்கு தொடர்பாக கடந்த இரு நாட்களாக வழக்கறிஞர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தாகவும் கூறினார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தம் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கைகளில் தமது பெயர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தை மிகவும் மதிப்பதாக கூறிய அவர், சட்டத்தின் மூலம் உரிய பாதுகாப்பை பெற முயற்சிப்பதாக கூறினார்.  விசாரணை அமைப்புகள் சட்டத்தை சமநிலை இல்லாமல் பயன்படுத்தினாலும், அதனை மதிக்க தயார் என்று அவர் கூறினார். சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே பேட்டி கொடுத்த சிதம்பரம் செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments