வெயிலுக்கு பெயர்போன வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை..!

0 2077

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித்தீர்த்தது.

வெயிலுக்கு பெயர்போன வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில், கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்துவருகிறது.

இந்நிலையில், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாபேட்டை ,சோளிங்கர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம்போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதிக உஷ்ணத்துடன் காணப்படும் பகுதிகளில் தொடர் மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழையால் அங்குள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பிவருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments