கமல்ஹாசன் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் வெற்றி பெறுவது பற்றி சிந்திக்க வேண்டும் - அமைச்சர்

0 572

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் யோசித்து பார்க்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையை அடுத்த திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பொதுமக்களோடு அமர்ந்து உணவு உண்ட அவர், பெண்களுக்கு புடவைகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி, அதிமுக, திமுக தவிர்த்து வேறு எந்தக் கட்சியும் தமிழ்நாட்டில் வரமுடியாது எனத் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள், வாக்குகளை பிரிக்க வேண்டுமானால் செய்யலாம், ஆனால் வெற்றி பெற முடியாது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments