மக்கள் நீதி மய்யம் நிர்வாக அமைப்பை விரிவாக்கம் செய்து கமல்ஹாசன் அறிவிப்பு

0 322

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக அமைப்பை விரிவாக்கம் செய்து அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே உள்ள தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் பதவியுடன் 6 பொதுச்செயலாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைப்பு பிரிவு பொதுச் செயலாளராக அருணாச்சலமும், வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச் செயலாளராக மவுர்யாவும் பொறுப்பேற்றுள்ளனர்.

தெற்கு மற்றும் மேற்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவியை தலைமை அலுவலகம் நேரடியாக நிர்வகிக்க உள்ளது. கொள்கைப்பரப்பு பொதுச் செயலாளராக ரங்கராஜனும், சார்பு அணிகள் பொதுச் செயலாளராக உமா தேவியும், தலைவர் அலுவலகம் பொதுச்செயலாளராக பஷீர் அகமதும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

துணைத்தலைவர் பதவியில் மகேந்திரனும் பொருளாளர் பதவியில் சந்திரசேகரும் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்காளர்களையும் கட்சி நிர்வாகிகள் நேரடியாக சந்திக்கும்பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments