முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை, ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார்-ஆர்.பி.உதயகுமார்

0 263

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் தொடர்பாக தமிழக அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு அளிப்பதற்காக 'இணையவழி ஒருபக்க விண்ணப்ப' பயன்பாட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.imageஅதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி படுகையில் பேரிடர் மீட்புப் படை தயார்நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொதுமக்கள் மத்தியில் எவ்வித பீதியும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தொடர் அறிக்கை அனுப்ப காவிரி படுகையில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் மீதான மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், துறைசார்ந்த முதலீடுகளுக்காக முதலமைச்சர் வெளிநாடு செல்லும் பயணத்தை, ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக சாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments