ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் கண்டுபிடிப்பு

0 478

கோவை அருகே ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைக்கப்பட்டது பற்றி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சந்திப்பு மற்றும் வட கோவை ரயில் நிலையங்களுக்கிடையே, பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது பக்கத்து தண்டவாளத்தில் சிமெண்ட் கற்களும், ஆங்காங்கே சிறிய அளவிலான கற்களும் வைக்கப்பட்டு இருந்ததை, பார்த்த ஓட்டுனர் இது பற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும், அங்கிருந்த சிமெண்ட் கற்களை பார்வையிட்டனர். இது நாசவேலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் ரெயில் தண்டவாளங்களில் போலீசார் டிராலியில் சென்று கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அனைத்து ரயில் நிலையப்பகுதியிலும் டிராலியில் சென்று கண்காணிப்பு பனியில் ஈடுபட்டு வருகிறார்கள். சுதந்திர தினத்துக்கு மறுநாள் வரை ரோந்து நீடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments