ககன்யான் திட்டப் பணிகள் தொடக்கம் - மகேந்திரகிரி இஸ்ரோ வளாக இயக்குநர்

0 370

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநர் மூக்கையா கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூக்கையா, சந்திரயான் 2 விண்கலம் தற்போது ஒரு லட்சத்து 42 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் 14ஆம் தேதி அன்று நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகளில் தற்போது ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் உந்து விசை அமைப்புக்கான தொழில்நுட்ப சோதனைகள், மற்றும் மேம்பாட்டுப் பணிகளை கவனிப்பது மகேந்திரகிரி இஸ்ரோ தொழில்நுட்ப வளாகத்தின் பணி என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments