தலைக்கவசம் அணியாமல் வந்தவரை தடுத்ததால் போலீசாரிடம் தகறாரில் ஈடுபட்ட இளைஞர்கள்

0 776

சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த போது தடுத்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

யானைகவுனி - சூளை சந்திப்பில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுப்படிருந்த போது, தலைகவசம் அணியாமல் வந்த இருவரை மடக்கிப்பிடித்தனர்.

தலைகவசம் அணியாமல் வந்ததற்காக போலீசார் வழக்குப்பதிய முற்பட்ட போது, தான் ஒரு வழக்கறிஞரின் தம்பி என்றும், சாலையின் நடுவே ஓடி வந்து எப்படி பிடிக்கலாம் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஐபிசி சட்டப்படி இது போன்று பிடிக்கக் கூடாது என அதிர வைத்த அந்த நபர் தனது செல்போனில் வீடியோவும் எடுத்தார்.

பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அந்த நபர், தலைகவசம் அணியாத தன்னை சாலையின் நடுவே ஓடி வந்து பிடித்ததாகவும், அந்தக் காவலர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்து அதிர வைத்தார்.அந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments