370 ரத்து - அரசிதழில் வெளியீடு..!

0 1211

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கி, மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கட்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில், காஷ்மீர் தொடர்பாக முக்கிய மசோதாக்களை அமித்ஷா தாக்கல் செய்தார்.

இந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானம் மற்றும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை, மாநிலங்களவையில் திங்கட்கிழமையும், மக்களவையில் செவ்வாய்க்கிழமையும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து 370-வது பிரிவை ரத்து செய்யும் மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து, மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்  370வது சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பான அரசாணையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments