முதலமைச்சரை சந்தித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர்

0 316

பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 40 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கு 50 ரூபாயாகவும் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பால் உற்பத்தியாளர்கள் வேண்டுக்கோளுக்கு இணங்க பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவரைச் சந்தித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் 2014-ஆம் ஆண்டுக்கு பின் பால் கொள்முதல் வில உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்தனர்.

27 ரூபாயாக உள்ள பசும்பால் கொள்முதல் விலையை 40 ரூபாயாகவும் 29 ரூபாயாக உள்ள எருமைப்பால் கொள்முதல் விலையை 50 ரூபாயாகவும் உயர்த்தி நிர்ணயிக்க வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறினர்.

குழந்தைகளின் சத்துணவு திட்டத்தில் முட்டைகள் வழங்குவது போல பால் வழங்குதல் கூட்டுறவுச் சங்கங்கள் பெறும் பாலுக்கு லிட்டர் அடிப்படையில் ஊக்கவிலை பாலில் கொழுப்புச்சத்து மற்றும் இதர சத்துகள் தரம் அறியும் வசதி உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments