மறுபயன்பாட்டிற்கான ராக்கெட் தயாரிப்புப் பணிகள் குறித்து தகவல்

0 217

மறுபயன்பாட்டிற்கான ராக்கெட் தயாரிப்பு மற்றும் ககன்யான் திட்டப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை தொழில்நுட்ப வளாக இயக்குநர் மூக்கையா கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மூக்கையா, சந்திரயான் 2 புவிவட்டப்பாதையில் செலுத்தப்பட்டுள்ள தொலைவானது 45 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டதாகவும், இது நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் 6 கிலோ மீட்டர் அதிகம் என்று கூறினார். செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 2.43 மணி அளவில் சந்திரயான் 2 நிலவில் இறங்கும் என்றும், இறங்கிய உடன் அது தகவல்களை பரிமாறத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

அடுத்ததாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யானுக்கான பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறிய அவர், மறுபயன்பாட்டிற்கான ராக்கெட் தயாரிப்பு சோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments