துணிக் கடைக்குள் புகுந்த இருவர், உரிமையாளரை பட்டாக் கத்தியால் வெட்டிய சம்பவம்

0 647

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில், துணிக்கடை உரிமையாளரை இருவர் பட்டாக் கத்தியால் வெட்டும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

நங்கவள்ளியைச் சேர்ந்த வேலு தங்கமணி என்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகராக உள்ளார். அதே ஊரில் துணிக் கடையும் நடத்தி வருகிறார். இந்த துணிக்கடைக்கு கடந்த செவ்வாய் கிழமை சென்ற இரு நபர்கள், வேலு தங்கமணியை பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய வேலு தங்கமணிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெட்டிய நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலு தங்கமணி மீது நடத்தப்பட்ட கொடூரத்தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

தாக்குதல் நடத்திய நபர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் மற்றும் மணி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நங்கவள்ளி போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களைத் தேடி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments