தலைக்கவசம் அணிவது குறித்த துண்டுப்பிரசுர விநியோகம்

0 235

தூத்துக்குடியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் கல்லூரி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

அங்குள்ள வ.உ.சி கல்லூரி முன்பு நின்றிருந்த போலீசார், அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தனர். துண்டுப்பிரசுர விநியோகம் குறித்து போக்குவரத்துக் காவலர் ஒருவர் செய்தியாளரிடம் பேட்டியளித்துக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் சாலைத் தடுப்பில் மோதி கீழே விழுந்தார். 

அவர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியதை சுட்டிக்காட்டிய போக்குவரத்துக் காவலர், அனைவரும் தவறாது தலைக்கவசம் அணியவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments