ரயிலில் அனுப்பப்பட்ட, ரூ 10 லட்சம் மதிப்பிலான எலட்ரானிக் பொருட்கள் திருட்டு

0 580

ஈரோட்டுக்கு டெல்லியில் இருந்து, ஜம்மு தாவி விரைவு ரயிலில் அனுப்பப்பட்ட, ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான எலட்ரானிக் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. ஹோம் தியேட்டர், எல்ஈடி டிவி, மடிக்கணினி, அயர்ன் பாக்ஸ், மின் விசிறி, உள்ளிட்ட பொருட்கள், ரயிலின் பார்சல் வேகனில் புக்கிங் செய்து அனுப்பிவைக்கப்பட்டன.

ஈரோட்டில் அவற்றை ரயில்வே பார்சல் ஊழியர்கள் எடுக்க சென்றபோது, அட்டைப்பெட்டிகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ரயில்வே போலீசாரும், சரக்கு அனுப்பும் அதிகாரிகளும், சென்று பார்வையிட்டனர். டெல்லியில் இருந்து வரும் வழியில் கொள்ளை நடந்திருப்பது தெரியவருவதுடன், எந்த ரயில் நிலையம் எனவும், ரயில் பார்சல் ஊழியர்கள் உடந்தையா எனவும் விசாரணை நடைபெறுகிறது.

மேலும் பொருட்களின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் இருக்கும் நிலையில், அதை பெற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை. இதனால் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments