வினோத அலங்காரத்தில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்

0 804

தாய்லாந்தில், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆசிரியர் ஒருவர் வினோத அலங்காரத்தில் பள்ளிக்கு சென்று பாடங்களை கற்றுக்கொடுக்கிறார்.

ரட்சாபுரி மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் தீராபோக் மீசத் என்பவர், தினமும் பள்ளி சீருடையில் வினோத அலங்காரத்தில் மாணவர்களுக்கு காட்சிக்கொடுக்கிறார்.

குறிப்பாக ஆசிரியர் ஆணாக இருந்தும், பெண்களை போல் கூந்தல் வைத்துக்கொண்டு, வினோத அலங்காரத்துடன் வகுப்பறைக்கு செல்வதை மாணவர்கள் பெரிதும் ரசிப்பதோடு, நகைச்சுவையுடன் கூடிய அவரது வகுப்பை ஆர்வத்துடன் கவனிக்கின்றனர்.

வினோத அலங்காரத்துடன் ஆசிரியர் வகுப்பு நடத்துவது வேடிக்கையாகவும், அற்புதமாகவும் இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments