MGR-ன் தலைவர் கலைஞரா, இல்லையா? பேரவையில் சுவையான விவாதம்

0 712

எம்.ஜி.ஆரின் தலைவர் கலைஞரா, இல்லையா என்பது குறித்து, பேரவையில் சுவையான விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில், சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சரவணன், "உங்கள் தலைவருக்கும் தலைவர், எங்கள் தலைவர் கலைஞர் என்றும், எனவே உங்களுக்கும் எங்கள் தலைவர் தான் தலைவர்" என்றும் கூறி தொடர்ந்து உரையாற்றி கொண்டிருந்தார்.

இந்த கருத்து குறித்து பேசிய அமைச்சர் தங்கமணி ‛‛எம்ஜிஆருக்கு தலைவர் கருணாநிதி அல்ல என்றும், எம்ஜிஆர்., தன்னிரகற்ற கட்சியின் பெருந்தலைவர் என்றும், எம்ஜிஆர் சுட்டிக்காட்டியதால் தான், கருணாநிதி, முதலமைச்சர் பதவிக்கு வந்தார், கட்சி பொறுப்பை ஏற்றார்’’ என்றும் கூறினார்.

உடனே, திமுக உறுப்பினர் எ.வ.வேலு குறுக்கிட்டு, ‛‛திமுகவில், எம்ஜிஆர் பொருளாளராக இருந்தார் என்பதால், கலைஞர் தலைவராக இருந்தார்’’ என விளக்கம் கொடுத்தார்.

மீண்டும் பேசிய அமைச்சர் தங்கமணி, "1971 தேர்தலில், இனிமேல் கருணாநிதி மீது ஊழல் குற்றச்சாட்டு வராமல் பார்த்துக்கொள்கிறேன் என, எம்ஜிஆர்., கூறியதால் தான், தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் ஆனார்" என்றார்.

தொடர்ந்து பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "எம்ஜிஆர் முதலமைச்சர் பதவிக்கு வந்தபின், அவர் உயிருடன் இருந்தவரை, கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை" என்றார்.

பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து, "சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவராக, கருணாநிதியின் பெயரை முன்மொழிந்ததே எம்.ஜி.ஆர்., தான் என்றும், அதுதான் வரலாறு" என்றும் கூறினார்.

தொடர்ந்து, அமைச்சர்களும், திமுக உறுப்பினர்களும் குரல் கொடுக்க, சபாநயகர் தலையிட்டு, இத்துடன் விவாதம் போதும், அமருங்கள் எனக் கூறி விவாதத்தை முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments