ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது அவதூறு - ராகுல் காந்தி ஜாமீனில் விடுவிப்பு

0 412

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தி மும்பை குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கடந்த 2017ம் ஆண்டு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட போது கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதோடு, தாக்கப்படுவதாகவும், சில சமயங்களில் கொலையும் செய்யப்படுவதாகவும் கூறினார்.

இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் மீதும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி, அவ்வமைப்பை சேர்ந்த துர்திமான் ஜோஷி என்பவர் மும்பை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது இந்த வழக்கின் விசாரணைக்காக மும்பை வந்த ராகுல் காந்தி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, 15 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகையின் மூலம் ராகுலை ஜாமீனில் விடுவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏக்நாத் கெய்க்வாட் ராகுலுக்கான பிணைத்தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments