மாணவர்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு..!

0 2101

எட்டாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மிகாமல் இருந்தால், அவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு எழுதலாம்.

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த உதவித்தொகை தற்போது 12 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில், 173 வது பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments