மியான்மரில் ரூ.747 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தீ வைத்து அழிப்பு

0 186

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, மியான்மரில் 747 கோடி ரூபாய் மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் தீ வைத்து அழித்தனர்.

சீனா, தாய்லாந்து, வங்க தேசம் ஆகிய நாடுகளுடன் இணைந்து மியான்மரும், தங்கள் எல்லைப்பகுதிகளில் நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கைப்பற்றப்பட்டுள்ள அரசின் வசமிருந்த இந்த போதைப் பொருட்கள் தற்போது அழிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே ஹெராயின் தயாரிப்பு மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தில் மியான்மர் 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments