தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கோரி தி.மு.க சார்பில் ஆர்பாட்டம்

தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காண வலியுறுத்தி பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கரூர்
கரூர் மாவட்டம் குளித்தலை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை பேருந்து நிலையத்தில் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். தண்ணீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காண வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் பிரச்சினையை கண்டித்து காலிக் குடங்களை வைத்து “குடம் இங்கே, தண்ணீர் எங்கே ?” என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Comments