யானைகளின் உடல்களை உண்ட 537 கழுகுகள் பலி

ஆப்ரிக்காவில் இறந்த யானைகளின் உடல்களை உண்ட 500க்கும் மேற்பட்ட அரிய வகை கழுகுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா வன பகுதியில் இறந்து கிடந்த 3 யானைகளின் உடல்களை உண்ட 537 கழுகுகள் உயிரிழந்து கிடந்துள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, இறந்து கிடந்த 3 யானைகளின் உடல்களில் விஷம் ஏற்றப்பட்டிருந்ததாகவும், அவற்றை உண்ட கழுகுகள் உயிரிழந்ததாகவும் கூறினர்.
பொதுவாக வேட்டையாடும் போது விலங்குகள் உயிரிழந்த இடத்திற்கு மேல் கழுகுகள் வட்டமிடுவதால், வேட்டையாடுபவர்கள் வனத்துறையினரிடம் எளிதாக சிக்கிக்கொள்கின்றனர்.
இதனால் கழுகுகளை அழிக்க இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அழியும் நிலையில் இருக்கும் 468 வெண்முதுகுப் கொண்ட கழுகுகள் உட்பட பல அரிய வகை கழுகுகள் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments