குத்தகை முறையில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி?

0 1591

இந்திய ரயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார் ரயில்களை குத்தகை முறையில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்பகிறது.  இதுதொடர்பாக பேசிய ரயில்வே அதிகாரி ஒருவர், ஆரம்பகட்டமாக சுற்றுலா மற்றும் IRCTC ஆகியவற்றுக்கு தலா ஒரு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதற்காக தனியாரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையைப் பெறவும் முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் தனியார் மூலமாக இயக்கப்படும் ரயில்கள் கூட்டம் குறைந்த அல்லது முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு இயக்க அனுமதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அதுபோன்ற வழித்தடங்களை அடையாளம் காணும் பணிகள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments