சினிமா ஒப்பனைக் கலைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

0 340

நடிகர் பாக்யராஜ் உள்ளிட்டோரிடம் பணியாற்றிய, முன்னாள் ஒப்பனை கலைஞர், சாலை மேம்பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் நேருஜி நகரில், சாலை மேம்பால கம்பியில் தூக்கிட்ட நிலையில், ஆண் சடலம் ஒன்று தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி இறந்தவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனைக் கொண்டு இறந்தவர் குறித்த விசாரணையை தொடர்ந்தனர்.

விசாரணையில், அவர் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த கணேசன் என்பதும், சினிமா ஒப்பனை கலைஞரான அவர், நடிகர் பாக்யராஜ் உள்ளிட்டவர்களிடம் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

அண்மையில் அவரது மகனுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த சில நாட்களாகவே கணேசன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே போடியிலிருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற நிலையில் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்லுக்கு அவர் ஏன் வந்தார் இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments