அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்து என்.எல்.சி. தொழிலாளர் பலி

0 306

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து நிரந்தர தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அனல்மின் நிலைய இரண்டாவது யூனிட்டில் கொதிகலன் அமைந்துள்ள பகுதியில் பெரியகாப்பான்குளத்தைச் சேர்ந்த வேல்முருகனும் மேலக்குப்பத்தைச் சேர்ந்த பாவாடை என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கொதிகலன் வெடித்ததில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த பாவாடை, என்.எல்.சி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments