கிர்கிஸ்தானுக்கு பாக். வான்பரப்பின் வழியாக மோடியின் விமானம் செல்ல திட்டம்

0 704

கிர்கிஸ்தான் நாட்டில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்லும் போது, அவரது விமானம் பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு அந்நாட்டிடம், மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலக்கோட்டில் இந்திய விமானப் படை நடத்திய துல்லிய தாக்குதலை அடுத்து, தங்கள் வான் பரப்புக்குள் இந்திய விமானங்கள் பறக்க அந்நாடு தடை விதித்தது. இந்த நிலையில், வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சிமாநாடு நடைபெறுகிறது.

இதில் பிரதமர் நரேந்திரமோடியும் பங்கேற்க உள்ளார். கிர்கிஸ்தான் செல்ல பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்தினால் 4 மணி நேரம் மட்டுமே செலவாகும். மாற்று வழித்தடத்தில் சென்றால் 8 மணி நேரம் விரயமாகும்.

எனவே நேர விரயத்தைத் தவிர்க்க, பாகிஸ்தான் வான்பரப்பில் மோடியின் விமானத்தை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments